குரும்பலூர் பேரூராட்சியில் வளர்ந்துள்ள சீமைக்கருவேலி முட்களை பொதுமக்களின் பங்களிப்போடு, பேரூராட்சி பணியாளர்கள் அகற்றினர்.
சென்னை உயர்நீதிமன்ற ஆணையினை நிறைவேற்றும் வகையிலும், தமிழ்நாடு அரசின் வனம் மற்றும் சுற்றுசூழல் அறிவிப்பின்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பாக, நகர்புற உள்ளாட்சியில் உள்ள சீமைக்கருவேலி முட்களை பொதுமக்களின் பங்களிப்புடன், நகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் அகற்றப்பட்டு வருகின்றது.
அதன்படி பெரம்பலூர் மாவட்டத்திலும், பேரூராட்சி பகுதிகளில் சீமைக்கருவேல் மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றது. சீமைகருவேல மரங்கள் வளர்வது, சுற்றுச்சூழலுக்கும், மனித சமுதாயத்திற்கும் மிகப்பெரிய சவாலாகவும், அச்சுறுத்தலாகவும் உள்ளது. மேலும் சீமைக்கருவேல் மரங்கள் எத்தகைய சூழ்நிலையிலும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு வளர்வதாலும், பூமிக்கடியில் உள்ள நீராதாரத்தை விரைவில் உறிஞ்சி வளரும் பண்பு கொண்டதாலும், நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. இதனால் நகர்புரங்களில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
இதனை முன்னிட்டு குரும்பலூர் பேரூராட்சியில் (19.09.2015) இன்று பேரூராட்சி பகுதிகளுக்குப்பட்ட மருதையான் குளம் மற்றும் தெப்பகுளம் உட்புற பகுதியில் அடர்ந்து வளர்ந்துள்ள சீமைக்கருவேல் மரங்கள் அனைத்தையும் 15-வது வார்டு பொதுமக்களின் பங்களிப்போடும், பேரூராட்சி பணியாளர்களுடன் சீமைக்கருவேல் மரங்கள் அகற்றப்பட்டது. குளத்தின் வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
இதனால் குரும்பலூர் பேரூராட்சியில் பருவமழை தொடங்குவதற்கு முன்னர் நீராதாரங்களை தூர்வாரி சீமைக்கருவேல் முற்றிலும் அகற்றப்பட்டதால், பருவமழையின்போது நீர்நிலைகளில் மழைநீரை சேமித்து, கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில், சுற்றுச்சூழலை பாதுகாத்தும், மழைநீரை சேமிப்பதற்கும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குரும்பலூர் பேரூராட்சியால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்கண்டப் பணிகளை குரும்பலூர் செயல்அலுவலர் (பொ) குமரன் ஒருங்கிணைத்து இருந்தார்.