பெரம்பலூர்: பெரம்பலுர் அருகே சாக்கடை கால்வாயில் ஐந்து மாத ஆண் குழந்தையின் கரு கிடந்தது குறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட 7வது வார்டு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் நேற்று காலை 9.30 மணியளவில் ஐந்து மாத ஆண்குழந்தையின் கரு கிடப்பதாக பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் அருண்பிரசாந்துக்கு, என்பவருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் எஸ்.ஐ., பெரியசாமி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.