பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு அவ்வப்போது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் வெளியிடப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து நடத்தப்பட்டு வருகிறது.
இப்பயிற்சி வகுப்புகள் மூலம் பயின்று பலரும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுப்பணிகளில் சேர்ந்துள்ளனர்.
தற்போது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-1 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்விற்கு மாவட்ட நிர்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும், இணைந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பயிற்சி அரங்கில் இலவச பயிற்சி வகுப்புகள் 14.08.2015 முதல் நடத்தப்பட உள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தின் நகல், வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் கைபேசி எண் ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்புகொள்ளமாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ்அகமது, தெரிவித்துக் கொள்கிறார்.