குரூப் 1 தேர்வுகளுக்கான வயது வரம்பை 45 ஆக உயர்த்த வேண்டும் என குரூப் 1 தேர்வு கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக அரசின் சார் ஆட்சியர் போன்ற உயர்பதவிகளுக்கு குரூப் 1 தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆனால், இந்த தேர்வுகள் மத்திய அரசின் யு.பி.எஸ்.சி தேர்வுகள் போன்று ஆண்டுதோறும் நடத்தப்படாமல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதனால், 33 வயதிற்கு மேற்பட்டவர்கள் தேர்வில் கலந்துகொண்டாலும், கடைசி கட்ட தேர்வின்போது அவர்கள் வயது வரம்பை தாண்டுவதால் பணியில் சேரும் வாய்ப்பை இழந்துவிடுவதாக குரூப் ஒன் தேர்வு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதனால் தேர்வின் அதிகபட்ச வயதை உயர்த்த வேண்டும் என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.