பெரம்பலூர்: பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றுபவர்கள் அருகில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.

இந்த நிலைமையை மாற்றவும், பணியாளர்கள் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களாகவே இருந்தால் அரசு திட்டங்களில் பொதுமக்களுக்கு ஆர்வத்துடன் ஈடுபட்டு, பணித்திறன் மேம்பாடு அடையும் என்ற நோக்கத்திலும், மாவட்ட நிர்வாகம் தன்னார்வ ஆசிரியர்களைக் கொண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வில் கலந்து கொள்ளும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த நபர்களுக்கு பல்வேறு கட்ட பயிற்சிகளை அளித்தது,

இந்த பயிற்சி வகுப்புகள் வருவாய்த்துறை, கல்வித்துறை, கால்நடைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுதுறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அலுவலர்கள் மூலமாக கடந்த 4 ஆண்டுகளாக வழங்கி வருகின்றது.

இதன் காரணமாக குரூப் – 4, குரூப் -2, கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கு நூற்றுக்கணக்கான பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த நபர்கள் தேர்வு பெற்று, அரசு பணியாளர்களாக பணியாற்றும் வாய்ப்பு பெற்றார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் – 4 பதவிகளுக்கான தேர்ச்சி பட்டியலில் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பயிற்சி பெற்ற வேப்பந்தட்டையை எ.ஜூனைத்தாபானு, பெரம்பலூர் எ.சமீம்பானு, கே.பிரவீனா, துறைமங்கலம் வி.சுபாஷினி, குன்னம் கே.வெங்கடேசன், தேனூர் கே.சரவணன், பொம்மனப்பாடி எம்.ராஜ்குமார், வேப்பந்தட்டை எஸ்.கண்ணன், கீழகணவாய் ஜி.சரவணன், நொச்சியம் டி.மைதிலி, எறையசமுத்திரம் ஆர்.சரவணன் ஆகிய 11 நபர்கள் தேர்ச்சி பெற்றனர். இவர்கள் அனைவரும் இன்று மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

மாவட்ட ஆட்சியர் பேசியதாவது :
நீங்கள் அனைவரும் மேலும் பல போட்டித் தேர்வுகள் எழுதி பொpய பணிகளில் பணிபுhpய வாய்ப்பு பெற வேண்டும். மேலும் நீங்கள் பெற்ற வெற்றியானது, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களாலும் அரசு பணி புரிய வாய்ப்பு பெறமுடியும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது.

நீங்களும் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள நபர்கள், உங்கள் ஊரைச் சார்ந்த நபர்களுக்கு ஊக்கமளித்து போட்டித்தேர்வுகளில் பங்கு பெறச் செய்வதுடன், அவர்களுக்கு உங்கள் அனுபவத்தின் மூலம் தேர்வு எழுத பயிற்சியும் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது போட்டித்தேர்வுகளுக்கு தன்னார்வத்துடன் பயிற்சி அளித்த வட்டாட்சியர் சீனிவாசன், வருவாய்த்துறையைச் சேர்ந்த சிலம்பரசன் ஆகியோர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!