பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே வயலப்பாடி கிராமத்தில் ஆதிதிராவிட இன மக்களுக்கிக கையகப்படுத்தப்பட்ட நிலைத்தை மீட்டு வீட்டுமனைகளாக பிரித்துதரக்கோரி தங்களின் வீடுகளில் கருப்பு கொடியேற்றி ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்டோர் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வயலப்பாடி கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் காலனித்தெருவில் வசிக்கும் 500க்கும் மேற்ப்பட்டோருக்கு வீட்டுமனை வழங்க வேண்டுமென கடந்த 1984 அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரிடம் வைக்கப்பட்ட கோரிக்கையை தொடர்ந்து மாவட்ட சமூகநலத்துறை மூலம் கடந்த 1984ம் ஆண்டு 4.75 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கையகப்படுத்தப்பட்ட நிலம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுநாள் வரை அரசு அதிகாரிகள் நில உரிமையாளர்களிடமிருந்து மீட்டு வீட்டுமனைகளாக பிரித்து ஆதிதிராவிட இன மக்களுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டி தங்களின் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தேர்தலை புறக்கணிப்பதாக கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனிடையே போராட்டம் குறித்து தகவலறிந்த வருவாய்த்துறை அதிகாரிகளோ அல்லது காவல் துறையினரோ இதுவரை சம்பவ இடத்திற்கு வந்து போராட்டம் குறித்து பொது மக்களிடம் கேட்டறியவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வயலப்பாடி கிராம ஆதிதிராவிட இன மக்களின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளதோடு, அகரம்சீகூர்&அரியலூர் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.