பெரம்பலூர் : சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள மணிவிழுந்தான் பகுதியில் தனியார் பள்ளி உள்ளது.
இன்று மாலை பள்ளி முடிந்தவுடன் ஒரு பஸ்சில் சுமார் 50 மாணவ-மாணவியர்களுடன் பெரம்பலூர் மாவட்டம் கை.களத்தூர் அருகே உள்ள பில்லாங்குளம் நோக்கி வந்து கொண்டிருந்தது.
பில்லாங்குளம் அருகே வந்த போது சாலையோரம் இருந்த பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக இறங்கி சாய்ந்தது.
இதில் பஸ்சில் பயணம் செய்த மாணவ-மாணவியா;களில் 10 க்கும் மேற்பட்டோர் லேசான காயம் அடைந்தனர். மற்ற மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.
பின்னர் அவர்கள் அருகிலுள்ள கூகையூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த சம்பவம் தொடர்பாக கை.களத்தூர் போலீயசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.