பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் காரியானூர் ஏரிக்கரையோரத்தில் இன்று காலை பிறந்து சில மணி நேரமே ஆன பெண் மான்குட்டி தத்தளித்துக் கொண்டு இருந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக கை.களத்தூர் வனக்காப்பாளர் தர்மராஜ் மற்றும் வனத்துறையினர்கள் வந்து மான்குட்டியை மீட்டு மாட்டுப்பால் கொடுத்தனர். ஆனால் மான்குட்டி பாலை சரியாக குடிக்கவில்லை. இந்நிலையில் நேற்று மதியம் மான்குட்டி பரிதாபமாக இறந்தது.
பின்னர் கால்நடை டாக்டரை வைத்து பரிசோதனை செய்து புதைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கை.களத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.