2012-2013 ஆம் ஆண்டிற்காக கொடிநாள் வசூல் இலக்கை எய்தியதைப்பராட்டி மேதகு தமிழக ஆளுநர் முனைவர்.கே.ரோசையா வழங்கிய பாராட்டுச் சான்றிதழ் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.தரேஸ் அஹமதுவிடம் வழங்கப்பட்டது.
நமது நாட்டின் எல்லைகளை இரவு பகலாக பாதுகாத்து வரும் முப்படை வீரர்களின் தியாகங்களை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 7 ஆம் நாள் கொடி நாளாக கொண்டாடப்படுகிறது. கொடி நாள் அன்று கொடி விற்பனை மூலமும், நன்கொடை மூலமும் திரட்டப்படும் நிதி, முப்படை வீரர்களின் குடும்ப நல்வாழ்விற்கும், முன்னாள் படை வீரர்களின் மேம்பாட்டிற்காகவும் செலவிடப்படுகிறது.
அந்தவகையில் 2012-2013 ஆம் ஆண்டிற்கான கொடிநாள் இலக்காக ரூ.7.54 லட்சம நிர்ணயிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தின் சார்பில் ஒரு வருடத்தில் ரூ.8 லட்சத்து 69 ஆயித்து 115 கொடிநாள் நிதியாக திரட்டி வழங்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எய்தியதற்காக மாவட்ட ஆட்சியரைப் பாராட்டி மேதகு தமிழக ஆளுநர் முனைவர் கே.ரோசையா பாராட்டுச்சான்றிதழை வழங்கியுள்ளார்கள்.
அந்த பாராட்டுச்சான்றிதழை முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் உதவி இயக்குநர் கர்னல்.கே.செந்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் .தரேஸ் அஹமதுவிடம் இன்று வழங்கினார்.