பெரம்பலூர் : கோனேரிப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளயில் நடைபெற்ற சிறப்பு சுருக்க திருத்தம் முகாமை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி 2016ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி 15.09.2015 முதல் 14.10.2015 வரை நடைபெறுகிறது. அது சமயம் 01.01.2016 தேதியன்று தகுதியான நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியான வாக்காளர்களின் பெயர்களை புதிதாக வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர், முகவரி போன்ற திருத்தங்களை மெற்கொள்ளவும், பெயர் நீக்கம் செய்யவும் விண்ணப்பிக்கலாம்.
இதற்றகாக 20.09.2015, 04.10.2015 மற்றும் 11.10.2015 ஆகிய மூன்று ஞாயிற்று கிழமைகளிலும் சிறப்பு முகாம்கள் அந்தந்த வாக்குசாவடிகளில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு, சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
20.09.2015 அன்று நடைபெற்ற சிறப்பு சுருக்க திருத்தம் முகாமின் போது பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 636 வாக்குச்சாவடி மையங்களிலும் படிவம் 6 ல் – 5259 படிவங்களும், படிவம் 7ல் – 174 படிவங்களும் , படிவம் 8ல் – 1256 படிவங்களும் , படிவம் 8எல் – 275 படிவங்களும் மொத்தம் 6,964 படிவங்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இரண்டாவதாக இன்று 04.10.2015 நடைபெற்று வரும் இம்முகாமினை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது கோனேரிபாளையம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமினைப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.