பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் நாளை கோமாதா பூஜை நடைபெறுகிறது.
உலக மக்கள் நலன் வேண்டியும், முறையான மழை வேண்டியும், இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை காக்க வேண்டியும் நாளை மகா சித்தர்கள் அறக்கட்டளை சார்பில் நாளை காலை 5.30 மணிக்கு துவங்கி (செப்.13 முதல் நவ.2 வரை) 51 நாட்கள் கோ மாதா பூஜை நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை தலைவர் ராஜ்குமார் சித்தர் ஏற்பாடுகளை செய்து வருகிறார். இதில் ஏராளமான ஆன்மிக அன்பர்கள், தொழிலதிபர்கள், கலந்து கொள்கின்றனர்.