20150912221120 (1)
பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் பிரம்மரிஷி மலையில், இன்று காலை 5.30 மணிக்கு துவங்கிய கோமாதா பூஜை, மகா சித்தர்கள் அறக்கட்டளை தலைவர் ராஜகுமார் குருஜி தலைமையில் நடைபெறுகிறது.

உலக மக்கள் நலன் கருதியும், முறையான மழை பொழியவும், இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை காக்கவும், நடத்ப்பட்ட கோ பூஜை, (செப்.13 முதல் நவ.2 வரை) 51 நாட்கள் கோ மாதா பூஜை நடக்கிறது. இன்று முதல் தொடர்ந்து நாள் 3 நாட்கள் மண்டோதரி பூஜையாக நடத்தப்படுகிறது. பின்னர், 210 சித்தர்கள் யாகம் நடத்தப்பட்டது. சாதுக்களுக்கு அன்னதானம், வஸ்திரதானம், காசு தானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், சிங்கப்பூர் சேர்ந்த மெய்யன்பர்கள் வழக்கறிஞர் ரத்தினவேல் மற்றும் நடராஜ பாபா, குஜராத் ஹரிஷாபட்டேல், (திருச்சி) துறையூர் செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி செயலாளர் வழக்கறிஞர் ராமநாதன், செயலாளர் செல்வராஜ், திருவண்ணாமலை பாண்டியன் ஸ்வாமிகள், ஆசனூர் வெங்கடேஸ்வர ஸ்வாமிகள், சென்னை ரவி சுவாமிகள், கடலூர் மாவட்டம், திட்டக்குடி கோமாதா அருந்ததிக் குழுவினர், ஏ.டி.எஸ்.பி விஜயபாஸ்கர், பெரம்பலூரை சேர்ந்த டாக்டர் ராஜசிதம்பரம், ஆன்மிக அன்பர்கள், தொழிலதிபர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை ஏற்பாடுகளை செய்து உள்ளது.

கோமாதா, பூஜையில் கலந்து கொள்ளவும், நன்கொடை அளிக்கவும் விரும்புவர்கள் +91 8870994533 என்ற எண்ணிலும் www.mahasiddhargaltrust.org யிலும் தொடர்பு கொள்ளலாம்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!