பெரம்பலூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக அரணாரை கிராமத்தில் நாளை முதற்கட்ட வாக்கு சேகரிப்பு பணி நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் சட்ட மன்ற தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் அன்னலட்சுமி திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் சட்டமன்ற தேர்தலுக்கான ஆலோசனைகளை வழங்கினார்.
கூட்டத்தில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் மருத ராஜா, சட்டமன்ற உறுப்பினர் இளம்பை தமிழ் செல்வன், முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், அனைத்துலக எம்.ஜி..ஆர் மன்ற பொருளாளர் வரகூர் அருணாசலம், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணசாமி (வேப்பூர்), கர்ணன் (ஆலத்தூர்) சிவப்பிரகாசம் (வேப்பந்தட்டை), சுரேஷ் (செந்துறை ) மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சகுந்தலா கோவிந்தன். ஒன்றிய குழுத் தலைவர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார் ஜெயலட்சுமி ,வெண்ணிலா ஆகியோர் பேசினார்கள்.
கூட்டத்தில் பெரம்பலூர் நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் மோகன், மாவட்ட பேரவை நிர்வாகிகள் ராம்குமார், கருணாநிதி குணசீலன், சித்தளி கணேசன், ஏ.கே.ராஜேந்திரன் , எசனை பன்னீர் செல்வம், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர்கள் வடிவேல், சண்முகம் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகளும் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக நாளை அரணாரை கிராமத்தில் முதற்கட்டமாக வாக்காளர்களிடம் அதிமுக வின் சாதனைகளை கையேடு வாயிலாக எ டுத்து கூறி வாக்கு சேகரிப்பு பணி நடத்துவது எனவும் அதை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 634 வாக்கு சாவடி அமைந்த கிராமங்களில் வாக்கு சேகரிப்பு பணி நடத்துவதும் எனவும் அதில் அனைத்து கட்சி நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்வது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது
…