பெரம்பலூர் : பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் எதிரே, இலங்கைக்கு எதிராக ஐ.நா. மன்றத்தில் தீர்மானம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தல் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த மாவட்ட செயலர் சி.எம். சின்னசாமி பேசியதாவது :
இலங்கை அதிபர் ராஜபட்சவை போர்க்குற்றவாளியாக அறிவித்து உரிய தண்டனை வழங்கவேண்டும். ஐ.நா.சபையில் இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானத்தை முன்மொழிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.
இந்த போராட்டத்தில், மாவட்டத் துணைச் செயலர் எம். கருணாநிதி, மாவட்ட இளைஞரணி செயலர் ஆர். வேல்முருகன், ஒன்றிய செயலர்கள் பி. செல்வன், கே. கிருஷ்ணமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் வி. சுதாகர், மாவட்ட இளைஞரணி துணைச் செயலர்கள் நல்லதம்பி, கே. மணிகண்டன், குரும்பலூர் செயலர் தினேஷ்குமார், அவைத் தலைவர் கண்ணுசாமி, பெரம்பலூர் நகர இளைஞரணி செயலர் என். ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பெரம்பலூர் ஒன்றிய இளைஞரணி செயலர் சரத்குமார் நன்றி கூறினார்.