பெரம்பலூர் அருகே நீரழிவு நோயால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் சாத்தநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் சுப்பிரமணி(60), இவர் தற்போது பெரம்பலூர் அருகே உள்ள புதுநடுவலூர் கிராமத்திலுள்ள அவரது மகன் பூபதி வீட்டில் வசித்து வந்துள்ளார்.
நீரழிவு நோயின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுப்பிரமணியின் வலது காலை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றி விட்டனர்.
இந நோயின் தாக்கம் தீவிரமடைந்ததால் இடது காலும் பாதிக்கப்பட்டதால் இடது காலையும் மருத்துவர்கள் அகற்ற வேண்டுமென கூறியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த அவர் நேற்று மாலை 3 மணியளவில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதை அறிந்த அவரது உறவினர்கள் சுப்பிரமணியை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில் சுப்பிரமணி உயிரிழந்தார்.
இது குறித்து அவரது மகன் பூபதி(28) அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு
பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.