பெரம்பலூர்: இன்று (26.6.2015) சர்வதேச போதை மருந்து ஒழிப்பு மற்றும் கடத்தல் தடுப்பு தினமாக கொண்டாடும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயிலில் இருந்து துவங்கிய இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் (பொ) ப.மதுகசூதன் ரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இப்பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலிலிருந்து, சங்குப்பேட்டை, கடைவீதி வழியாக வட்டாட்சியர் அலுவலகம் வரை சென்றது.
இந்த பேரணியில் சுமார் 600 க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் போதைப் பொருள் ஓழிப்பு குறித்த பிரச்சாரம் செய்து முழக்கமிட்டு சென்றனர்.