பெரம்பலுார் : பெரம்பலுார் மாவட்டம் நொச்சிக்குளம் கிராமத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் நல்ல மழை பெய்தது. அப்போது மருதையாறு அருகே உள்ள வயல் பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது. வயலில் இருந்த மின் கம்பத்திலிருந்து மின்சாரம் தாக்கியதில் அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த நொச்சிக்குளம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகளான ராமச்சந்திரன் என்பவரின் ஒரு மாடு, ஒரு ஆடு, சுப்ரமணியன் என்பவரின் இரண்டு மாடு, மூன்று ஆடு ராவணன் என்பவரின் இரண்டு ஆடு என மொத்தம் மூன்று மாடு, ஆறு ஆடுகள் உயிரிழந்தன. இது குறித்து அரியலூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கி்ன்றனர்.