மனிதநேய மக்கள் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட மாணவர் இந்தியா அமைப்பாளர் பா. வசந்தன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுத்துள்ள மனுவில் கோரியிருப்பதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் சுற்றுலா தளமான சாத்துனூர் கல்மரத்தை காண செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும், டைனோசர் முட்டை படிமங்கள், கடல் நத்தை, கடல் ஆமை போன்றவற்றின் படிமங்களை அருங்காட்சியகத்தில் அவற்றை வைத்து முறையாக மக்கள் பார்க்கும் வகையிலும், அங்கு கட்டிமுடிக்கப்பட்டு நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் உள்ள பயணியர் விடுதியை மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேணடுமென அதில் கோரியுள்ளார்