பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் தேநீர் விடுதிக்குள் ஆம்னி பேருந்து புகுந்து ஏற்பட்ட விபத்தில் டிரைவர் உட்பட 10 பேர் லேசான காயமடைந்தனர்.
சென்னையிலிருந்து 50க்கும் மேற்ப்பட்ட பயணிகளுடன் இராமநாதபுரம் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பஸ் பெரம்பலூர் அருகே திருச்சிசென்னை தேசிய
நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது, திடீரென டிப்பர் லாரி ஒன்று சாலையை குறுக்கிட்டதால் நிலை தடுமாறிய ஆம்னி பஸ்
டிப்பர் லாரியின் பின் பகுதியில் மோதி சாலையோரத்தில் உள்ள ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான தேநீர் விடுதியில் புகுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஆம்னி பஸ் டிரைவரான இராமநாதபுரம் மாவட்டம் மோர்குளம், கீழக்கரை பகுதியை சேர்ந்த நூர்முகமதுவுக்கு(37), பலத்தகாயத்துடன் கால்
முறிவும், முதியவர் ஒருவர் உட்பட 10க்கும் மேற்ப்பட்ட பயணிகள் லேசான காயமடைந்து அதிஷ்டவசமாக உயிர் தப்பி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று அவரவர் சொந்த ஊர் திரும்பினர்.
சிறுவாச்சூரில் இதுபோன்ற நிகழும் தொடர் சாலை விபத்திற்கு அப்பகுதியில் மேம்பாலம் இல்லாதது தான் காரணம் என்றும், தொடர் விபத்துகளை தவிர்த்திட
சிறுவாச்சூரில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே ஆம்னி பஸ் விபத்திற்கு காரணமான தப்பியோடிய டிப்பர் லாரி டிரைவரை பெரம்பலூர் போலீசார் தேடி வருகின்றனர்