பெரம்பலூர் : பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள நாராயணசாமி சிலை அருகே , சாலையோர வியாபாரத்துக்கு இடம் ஒதுக்கீடு செய்யக்கோரி சி.ஐ.டி.யூ சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, சாலையோர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜே. கஜேந்திரன் தலைமை வகித்தார்.
செயலர் வி. வரதராஜன், பொருளாளர் ஏ. கண்ணன், துணை செயலர் எம். செல்லதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சி.ஐ.டி.யூ மாவட்டச் செயலர் ஆர். அழகர்சாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், சாலையோர வியாபாரிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க வேண்டும்.
சாலையோர வியாபாரத்துக்கு இடம் ஒதுக்கீடு செய்வதோடு, வியாபாரிகள் சங்கத்துக்கு சங்க அலுவலகம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில், சி.ஐ.டி.யூ நிர்வாகிகள் பி. ரெங்கராஜ், அஏ. கணேசன், பி. குணசேகரன், பிரகாஷ், பி. பாரதி, சிவக்குமார், எஸ்.கே. சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்