பெரம்பலூர் அருகே வேகக்கட்டுப்பாட்டு தடுப்பு பலகையில் மோட்டார் சைக்கிளில் மோதியவர் இன்று உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் பெருமத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மருதமுத்து மகன் மணிகண்டன்(36). விவசாயி. இவர், பெருமத்தூரிலிருந்து பாடாலூருக்கு மோட்டார் சைக்கிளில் நேற்றிரவு சென்றார்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் அருகே சென்று கொண்டிருந்த போது சாலையில் வைக்கப்பட்டிருந்த வேகக் தடுப்பு பலகையில் மோதியதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்ற இவர் இன்று உயிரிழந்தார்.
இதுகுறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.