பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தையை, பெரம்பலூர் மகளிர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கரூரை சேர்ந்தவர் குமார் மனைவி அமுதா (35). இவர்களுக்கு, இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குமார் உயிரிழந்து விட்டார்.
இதனிடையே, பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள அனுக்கூர் கிராமத்தை சேர்ந்த முருகேசன் (37) பழைய இரும்பு வியாபரத்துக்காக அடிக்கடி கரூருக்கு சென்று வந்த போது,
அமுதாவுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அமுதாவையும், அவரது மகள்களையும் அனுக்கூர் கிராமத்துக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 31 ஆம் தேதி இரவு 13 வயதே வளர்ப்பு மகளை முருகேசன் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இதுகுறித்து, அமுதா அளித்த தகவலின் பேரில் பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலர் பேச்சியம்மாள் பெரம்பலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வழக்குப் பதிந்த மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரஞ்சனா, முருகேசனை கைது பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இன்று சிறையில் அடைத்தார்.