அண்மையில் நடைபெற்ற தென் இந்திய புறா பந்தயத்தின் மிகச்சிறிய வயது குறைந்த புறாக்களின் பந்தயத்தில் மதுரையை சேர்ந்த திரு.வி.செல்வம் பட்டம் வென்றார். தென் இந்திய புறா பந்தய கூட்டமைப்பின் சார்பில் போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கும் விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு புதிய சென்னை புறா பந்தய அசோசியேசன் தலைவர் திரு.லயன். கே. பழனியப்பன் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக ஹைதராபாத் மத்திய ரிசர்வ் படை டிஐஜி அஜய் பரதன்,ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தா.மோ.அன்பரசன் ,திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் தென் இந்திய புறா பந்தயத்தில் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. அப்போது தென் இந்திய புறா பந்தயத்தின் மிகச்சிறிய வயது குறைந்த புறாக்களின் பந்தயத்தில் மதுரையை சேர்ந்த திரு.வி.செல்வம் பட்டம் வென்றமைக்காக அவருக்கு கேடயம் மற்றும் கோப்பை பரிசளிக்கப்பட்டது. இதில் ஐதராபாத்தை சேர்ந்த கணக்காயர் சையது அப்துல் சாதிக் , சென்னை பல் மருத்துவர் பி. நோயல கண்ணன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.