பெரம்பலூர் :சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் நடைபெற்ற சமபந்தி நிகழ்ச்சியில் 100 ஏழை,எளிய முதியோர்களுக்கு, கோவிலுக்கு காணிக்கையாக கொடுக்கப்பட்ட சேலைகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது வழங்கினார்.
இந்தியத் திருநாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சமபந்தி நிகழ்வு இன்று(15.8.2015) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர். தரேஸ் அஹமது கலந்துகொண்டார்.
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலுக்கு காணிக்கையாக வரப் பெற்ற சேலைகளை 100 ஏழை, எளிய முதியோர் மற்றும் மகளிருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். பின்னர் அவர்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார்.
இந்நிகழ்வில் கோவில் செயல் அலுவலர் ஜெயதேவி மற்றும் அறநிலையத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.