பெரம்பலூர் : பெரம்பலூர் நகரின் பல பகுதிகளில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியேறி ஆங்காங்கே குடியிருப்பு பகுதி அருகாமையில் தேங்கி நிற்பதால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவும அபாயம் ஏற்பட்டுள்ளது
பெரம்பலூர் வெங்கடேசபுரம் விரிவாக்க பகுதியான சுந்தர் நகர் பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பு காரணமாக கழிவுநீர் வெளியேறி கடும் துர்நாற்றம் வீசுகிறது.
அப்பகுதி மக்கள் கடந்த 3 நாட்களாக நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் இதுவரை எவரும் வந்து அப்பகுதியை எட்டிக்கூட பார்க்கக்கூடவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
டயர், கொட்டாங்குச்சி போன்றவற்றில் சிறிது நீர் தேங்கி நின்றாலே டெங்கு கொசு உற்பத்தியாகி நோய் பரவுவதாக கூறும் சுகாரத்துறை அதிகாரிகள் குளம் போல் நிற்கும் கழிவு நீர் சுகாதார துறை அதிகாரிகளின் கண்களுக்கு தெரியாமல் போனதேனோ,
இப்பகுதியில் மாதத்திற்கு 4 முறை இதே போன்ற நிலைதான் பெரம்பலூர் நகரில் தினந்தோரும் பல இடங்களின் நிலைமை இதே போன்று கானப்படுகிறது. நேற்றைய முன்தினம் 18வது வார்டு பகுதி தீரன் டெப்போ பகுதி என பல பகுதிகளில் நிலைமை இப்படித்தான்.
பாதாள சாக்கடை நீர் நிரம்பி சாலையிலோ,குடுயிருப்புக்கு அருகாமையிலோ நின்றாலும் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தாலும் செவிடன் காதில் ஊதிய சங்கு போன்ற நிலைதான்.
பாதாளசாக்டை திட்டம் வந்தால் கழிவுநீர் பிரச்சனைக்கு முடிவு ஏற்படும் என நினைத்திருந்த பெரம்பலூர் நகர மக்களுக்கு வேலியில போகிற ஓணாணை பிடித்து வேட்டிக்குள் விட்ட கதையாகி விட்டது.
மாவட்ட நிர்வாகம் இனியாவது விழித்தெழாவிட்டால் மழை காலம் நெருங்குவதால் வெளியேரும் பாதாளசாக்கடை நீரால் நோய்கள் பரவி நகர் முழுவதும் மருத்துவ சிகிச்சை முகாம்கள் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.