பெரம்பலுார் மாவட்டத்தில் சுகாதார ஆய்வாளர் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பெரம்பலுார் மாவட்டம் அகரம்சீகூர் அருகே உள்ள வசிஷ்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக்கேயன் (42), இவர் பெரம்பலுார் மாவட்டம் மேலமாத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கடுமையான காய்ச்சல் இருந்து வந்தது.
இதனால் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு ரத்தப்பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதாக கூறப்படுகிறது.
இவருக்கு ரத்த பரிசோதனை செய்து பார்த்தபோது பிளேட்லெட்டின் அளவு நாளுக்கு நாள் குறைந்து வருவதால் ஐ.சி.யூ., வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.