பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே எசனை கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை சென்னை தனியர் அறக்கட்டளை சார்பில் மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையம் துவக்க விழா நடைபெற்றது.
விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தலைமை
வகித்து தகவல் பரப்பு மையத்தை திறந்து வைத்து பேசியதாவது: இம்மையம் மத்திய, மாநில அரசின் சுற்றுச்சூழல் பற்றிய தகவல் பரப்புவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள மையமாகும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மையம் அமைத்து மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் சம்மந்தமாகவிழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் மரம் நடுதல், நெகிழி பைகளின் பயன்பாட்டின் தீமைகளை பற்றி
இம்மையத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ, மாணவியர்கள் ஒவ்வொருவாரமும் சுழற்ச்சி முறையில் வீடியோ, புத்தக வாசிப்பு போன்ற விழிப்புணர்வு பயிற்சிகள் வழங்கப்படும்.
இந்த பயிற்சியில் தாங்கள் தெரிந்து கொண்ட தகவல்களை மக்களுக்கு பரப்பும் பணியை மாணவர் பருவத்தில் நீங்கள் எல்லாம் செய்ய வேண்டும், இம்மையத்தை பயன்படுத்தி அனைத்து மாணவ, மாணவியர்களும் பயன் பெற வேண்டும் என்று கூறினார்.
விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் ஜெயராமன், மாவட்ட வன சரக அலுவலர் ரவிசங்கர், எசனை அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியை கலைமகள், எசனை அரசு மேல் நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் ரெங்கசாமி,
எசனை அரசு மேல் நிலைப்பள்ளியின் சுற்றுச்சூழல் மன்ற ஒருகிணைப்பாளர் ஆசிரியை வசந்தி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாவட்ட பசுமைப்படையின் ஒருகிணைப்பாளருமான முகமது உசேன், வரவேற்றார்.
பெரம்பலூர் மாவட்ட சுற்றுச்சூழல் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் கோபால் நன்றி கூறினார்.