* இலங்கையில் மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ள நகரத்தில் சீகிரியா குன்று அமைந்துள்ளது. இக்குன்று 200 மீற்றர் உயரமானது. அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சித்திரங்கள் பல உள்ளன. 6ம் நூற்றாண்டைச் சேர்ந்த சித்திரங்கள் உலக மரபுரிமையாக விளங்குகிறது.
* தந்தையான தாதுசேன மன்னனைக் கொலை செய்து அரசினைப் பெற்ற காசியப்பன் முகலாலன் என்ற சகோதரனுக்குப் பயந்து பாதுகாப்பு கருதி சீகிரியாக்க் குன்றில் அரணொன்றைக் கட்டினான். அதுவே சீகிரியாக்குன்று.
சீகிரியாவில் உள்ள சிறந்த கட்டடக்கலை, பளிங்குச்சுவர், படிக்கட்டுகள், ஓவியம், சிங்கத்தின் வாய், பூங்கா, நீர்த்தேக்கம், குளியல் தடாகம், அகழி போன்றன வியத்தகு அரண்மனை அமைப்பைக் காட்டுகிறது.
* பாறையின் கடினமான பகுதிக்கு ஏற சிங்கத்தின் வாயிலிருந்தே வழி ஆரம்பமாகிறது. பாதுகாப்புச் சுவர், பளிங்குச்சுவர் அல்லது கண்ணாடிச் சுவர் எனப்படுகிறது. இதில் எழுதப்பட்டுள்ள கவிதைகள் சீகிரியா கிறுக்கல் கவிதைகள் எனப்படும்.
* ” மகுல் உயன ” என்ற பரந்த பூங்கா நீர்ப்பூங்ஙாவுடன் கூடியதாக அமைந்துள்ளது. சீகிரியா படிக்கட்டின் மேற்பகுதியில் ஏறிய பின் சீகிரியா ஓவியங்களைக் கண்டு களிக்கலாம். குன்றின் உட்குழிவான இடத்தில் காணப்படும் பெண்களின் உருவங்கள் மேகங்களிலிருந்து எழும்பி, உடலின் மேற்பாகம் தெரியும் வண்ணம் பெண்களின் உருவங்கள் உலகின் உன்னத கலைப்படைப்புகளாகும்.
* சீகிரியாவின் ” நீர் மலர் ” மிகச் சிறந்த தொழில் நுட்பமாகும். வேகமாகப் பாய்ந்தோடும் நீர் பாய்த்சலுக்குத் தடை ஏற்படுத்தல் மூலம் நீரினை மேலே எழச் செய்யலாம் என்ற எண்ணக்கருவை மையமாகக் கொண்டே ” நீர் மலர் ” அமைக்கப்பட்டுள்ளது. தற்போதும் கூட இந்நீர்மலர் மழைக்காலத்தில் செயற்படுகிறது.
* தற்காலத்தைப் போன்று வசதிகள் இல்லாத அக் காலத்தில் குன்றின் உச்சியில் பெரிய மாளிகை அமைந்தமை எம்மை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. இந்த சீகிரியா மிகச் சிறந்த நிர்மாணிப்பாகும். சிறிய தீவான இலங்கையின் சிறப்பினை உலகம் அறிந்திட எமக்கு அளித்த கலைஞர்களையும் எண்ணி பெருமையடையலாம். உண்மையில் சீகிரியா சிறந்த கலைப்ளடைப்படைப்பாகும். நீங்கள் இலங்கை வரும் போது ஒரு தடவை சென்று பார்க்க வேண்டிய இடம் !!!