பெரம்பலூர் அருகே திரவுபதி அம்மன் கோயிலில் நடந்த தீ மிதி திருவிழாவையொட்டி 100க்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் தீ மிதித்தும், சாட்டையில் அடி வாங்கியும் அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் சு.ஆடுதுறை கிராமத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோயில் திருவிழா ஓவ்வொரு ஆண்டு தோறும் பங்குனி மாதம் கடைசி வாரத்தில் துவங்கி சித்திரை மூன்றாவது வாரம் வரை 21 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
வழக்கம் போல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 12ந்தேதி (பங்குனி 30ந்தேதி) கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் சு.ஆடுதுறை திரவுபதி அம்மன் கோவில் திருவிழா துவங்கியது.
திருவிழாவையொட்டி திரவுபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதணை, அம்மன் திருவீதி உலா, சிறப்பு பூஜைகள் மற்றும் திருக்கல்லாணம், துயில் அலித்தல், அட்ஷய பாத்திரம், அர்ச்சுணன் தபுஸ், பூ எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் கடந்த 17 நாட்களாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீ மிதி மற்றும் சாட்டையடி திருவிழா 18ஆம் நாளான நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பிள்ளை வரம் வேண்டியும், தீராத நோய் தீரவும், செல்வ செழிப்புடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ வேண்டியும்திரௌபதியம்மனை வணங்கி, வேண்டுதல் வைத்து வேண்டுதல் நிறைவேறிய 100க்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் விரதமிருந்து தீ மிதித்தும் சாட்டையால் அடி வாங்கியும் தங்களின் நேர்த்தி கடனை அம்மனுக்கு செலுத்தினார்கள்.
இந்த திருவிழாவில் சு,ஆடுதுறை, ஒகளூர், புதுப்பேட்டை, பென்னக்கோணம், கழனிவாசல், அத்தியூர், அகரம்சிகூர், வடக்களூர், மண்டபம்,கிழுமத்தூர் உள்ளிட்ட பெரம்பலூர் மாவட்டத்தின் பல பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து நாளை மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும், மே 1 அன்று, பட்டாபிஷேகமும் அதனைத்தொடர்ந்து மே 2ந்தேதி கும்ப பூஜை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் விழாக்குழுவினர் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் செய்து வருகின்றனர்.