பெரம்பலூர் அருகே சென்டர்மீடியன் கட்டையில் மினி டிராவல்ஸ் பஸ் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த 29 பேர் ஒரு மினி டிராவல்ஸ் பஸ்சில் கேரளாவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு ராமேஸ்வரம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பார்த்துவிட்டு மீண்டும் ஆந்திராவுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். பஸ்சை சத்யநாராணன் மகன் முரளிகிருஷ்ணன்,37, என்பவர் ஓட்டினார்.
பஸ் நேற்று அதிகாலை பெரம்பலுõர் மாவட்டம் வாலிகண்டபுரம் கிராமம் அருகே வந்தபோது டிரைவர் துõங்கிவிட்டதாக தெரிகிறது. அப்போது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் இருந்த சென்டர்மீடியன் கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பாஸ்கரராவ் மனைவி பல்லாலம்மா,46, சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். மேலும் பஸ்சில் பயணம் செய்த 18 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இத்தகவலறிந்த மங்கலமேடு போலீஸார் விபத்துள்ளானவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து பல்லாலம்மாவின் மகன் பீமேஸ்வரராவ்,18, கொடுத்த புகாரின்பேரில் மங்கலமேடு இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் வழக்கு பதிந்து டிரைவர் முரளிகிருஷ்ணனை கைது செய்து விசாரிக்கிறார்.