உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு 2015- ல் கலந்து கொள்ள விருப்பமுள்ள தொழில் முனைவோர், நிறுவனங்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வாய்ப்பு :
தமிழ்நாடு முதலீட்டார்களின் விருப்பமான மாநிலமாக உள்ள நிலை தொடர்ந்திடவும், வளா;ச்சிக்கான நல்ல சூழ்நிலையை மேம்படுத்தவும்,
சென்னை வர்த்தக மையத்தில் வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் உலகளாவிய முதலீட்டாளர்களின் மாநாட்டினை நடத்த தமிழக அரசு உத்தேசித்துள்ளது.
இந்த மாநாட்டில் விமானங்கள், வேளாண் பொருட்கள் மற்றும் உணவு பதப்படுத்துதல், வாகனம் மற்றும் வாகன உதிரிபாகங்கள், உயிரி தொழில்நுட்பம் மற்றும் மருந்துகள், ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல், மின்னணு வன்பொருட்கள், கனரக பொறியியல் தொழில்கள், உட்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதுசார்ந்த தொழில்கள் , புதுப்பிக்கதக்க எரிசக்தி, திறன் மேம்பாடு, டெக்ஸ்டைல் மற்றும் இதர துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள், வெளிநாட்டினரின் முதலீடு விபரங்கள் மற்றும் கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் உலகளாவிய முதல் 500 நிறுவனங்கள் முதுநிலை அரசு அலுவலர்கள், கொள்கை வகுப்பாளார்மற்றும் திட்டமிடுவோர் ஆகியோருடனான தனித்தனியான சந்திப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவை மட்டுமல்லாமல் பங்கேற்பாளர் பயனடையும் வகையில் தகவல் கூட்டங்களும், அரசின் முனைப்பாடுகளும் தமிழ்நாட்டின் பாரம்பாரியமும் வெளிபடும் வகையிலான காட்சிகளும் இக்கூட்டத்தில் இடம் பெறும்.
இக்கூட்டத்தில் பங்கேற்க விருப்பமுள்ள தொழில் முனைவோர், நிறுவனங்கள் http://tamilnadugim.com எனும் இணையதளத்தில் பதிந்து பங்கேற்பை முன்னதாகவே உறுதி செய்து கொள்ளுமாறும், இவ்வாறு பதிவு செய்தததை பெரம்பலூர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளருக்கு dicpblr@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ 04328 291595 எனும் தொலைபேசிக்கோ தகவல் தெரிவித்து பயன்பெறலாம்.