பெரம்பலூர் மாவட்டத்தில் செப்டம்பர் – அக்டோபர் 2015 மேல்நிலைத் தேர்வெழுத விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் 13.08.2015 (வியாழன்) அன்று முதல் 19.08.2015 (புதன்) வரை உள்ளதை தற்போது 22.08.2015 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தின் அரசுத் தேர்வுகள் சேவை மையமான ஆண்களுக்கு பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், பெண்களுக்கு புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நேரில் சென்று ஆன் லைனில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி தெரிவித்துள்ளார்.