பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூரில் உள்ள தர்மராஜா, ஸ்ரீ திரவுபதி அம்மன் கோயில் தேரோட்டம் செப். 9 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது.
அரும்பாவூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்மராஜா, ஸ்ரீதிரவுபதி அம்மன் கோயில் தேரோட்டத்தை யொட்டி, கடந்த செப்.30 ஆம் தேதி குடியழைத்தல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 31 ஆம் தேதி மாரியம்மனுக்கு பால்குடம், பொங்கல், மாவிளக்கு பூஜைகளும், 1 ஆம் தேதி பெரியசாமி கோயிலுக்கு பொங்கல், மா விளக்கு பூஜையும் நடைபெற்றது.
தொடர்ந்து, 2 ஆம் தேதி ஸ்ரீ அங்காளம்மன், பெரியாண்டவர் கோயிலுக்கு பொங்கல் மா விளக்கு பூஜையும், 3 ஆம் தேதி திருக்கல்யாணமும், 4 ஆம் தேதி ஸ்ரீ தர்மராஜ், ஸ்ரீதிரௌபதி அம்மனுக்கு பால் குடம், பொங்கல், மா விளக்கு பூஜையும், 5 ஆம் தேதி கிருஷ்ணர் தூது விழாக்கோலமும், ஞாயிற்றுக்கிழமை இரவு சுவாமி புறப்பாடும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திங்கள்கிழமை மாலை தீ மிதித்தல் நிகழ்ச்சியும், புதன்கிழமை காலை 9.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.