பெரம்பலூர்: தமிழகம் முழுவதும் உள்ள 16549 பகுதி நேர ஆசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக பணி நிரந்தரம் கோரி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு கொடுத்தனர்.
மக்கள் நீதிப் பேரவை சார்பில் ஆதி தமிழ்ச்செல்வன், தனியார் கேபிள் நிறுவனங்கள் அரசு நிர்ணயம் செய்த கட்டணம் 70 ரூபாய் வசூலிக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம் காரை ஊராட்சி மலையப்ப நகரில் உண்டு உறைவிடத்துடன் கூடிய துவக்கப்பள்ளியை துவங்க வேண்டுமென தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் சுப்ரமணியன் தலைமையில் ஏராளமான நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.