இணையதள ஊடகங்கள், செய்திகளை வாசகர்களுக்கு புதிய பரிமாணத்தில் வழங்க, கூகுள் நிறுவனம் செய்தி ஆய்வகம் (Google Lab) என்னும் புதிய இணையதள சேவையை அறிமுகம் செய்துள்ளது.
புதிய ‘செய்தி ஆய்வகம்’ வசதி மூலம் இணையதள வாசகர்களுக்கு வரைபடம் , யூடியூப் ,அட்டவணை , கூகுள் எர்த் மற்றும் கூகுள் தேடல் ஆகிய கருவிகளை கொண்டு புதிய பரிமாணத்தில் செய்திகளை வழங்க முடியும் .
செய்தி ஊடகங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த சேவையின் பயிற்சியினை ஊடகவியலாளர்கள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுள்ளது.
செய்தி ஆய்வகம் (Google Lab) இணையதள முகப்பு பக்கத்தில் இந்த சேவையை எப்படி பயன்படுத்தலாம் என்பது பாடமாக கொடுக்கப்பட்டுள்ளது . இந்த சேவை குறித்த பாடங்களை தெரிந்துக்கொள்ள g.co/newslab என்ற இணையதளத்தை பார்க்கலாம்.