பணியை பார்வையிட்ட பிறகு மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது::
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் கல்லாறு ஒடையின் குறுக்கே பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்தின் மூலமாக செம்மலை, பச்சைமலை ஆகிய மலைகளின் இடையே மலைப்பகுதியில் பெய்யும் நீரை வீணாகாமல் தடுத்து விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு பயன்படுத்தும் வகையில் ரூ.19 கோடியில் 665 மீட்டர் நீளமுள்ள கரையுடன் ஏரி கட்டப்பட்டு வருகின்றது.
இந்த ஏரி அமைக்கப்படுவதன் மூலம் 30.67 மில்லியன் கனஅடி நீரை; 10.30 மீட்டர் ஆழத்திற்கு சேமிக்க இயலும். இந்த ஏhpயின் நீர்ப்போக்கி அமைக்க 11 மீட்டர் உயரத்திற்கு கான்கீரிட்டினால் ஆன பலமான கட்டுமான அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர் போக்கியின் இருபுறமும் மலையுடன் இணைக்கும் வகையில் 12 மீட்டர் உயரத்திற்கு கரைகள் அமைக்கப்பட்டு மண் அரிப்பு ஏற்படாத வண்ணம் கருங்கல் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த ஏரி அமைக்கும் பணிக்காக கூடுதலாக மறு மதிப்பீட்டின்படி ரூ.14.07 கோடி மதிப்பீடு சேர்த்து மொத்தம் ரூ.33.07 கோடியும் சமச்சீh; வளா;ச்சிநிதியிலிருந்து நீh;பிடி பகுதியினை ஆழப்படுத்த 3.30 கோடியும் சேர்ந்து 36.37 மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த ஏரி அமைக்கப்படுவதன் மூலம் நேரடியாக 859 ஏக்கர் புன்செய் நிலம் பாசன வசதி பெறும். மேலும் ஆற்றின் மதகின் மூலம் வெங்கலம் ஏரிக்கு கீழ் உள்ள சுமார் 421.01 ஏக்கர் ஆயக்கட்டிற்கு உறுதி செய்யப்பட்ட நீரும், நிலத்தடி நீர் செறிவூட்டப்படுவதால் கிணற்றுப்பாசனம் மூலம் கூடுதலாக 169 ஏக்கர் புன்செய் நிலங்களும் பாசன வசதி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் மறைமுகமாக 2,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
இந்த ஏரிக்கு அன்னமங்கலம் வழியாக வரும் வகையில் அரசலூர் மற்றும் விசுவக்குடி வரையில் 1.20 கி.மீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கப்பட உள்ளது. ஏரியின் இடதுபக்க வாய்க்கால் நீளம் 1750 மீட்டா; அதன் ஆயக்கட்டு 299.24 ஏக்கா;கள் ஏரியின் வலதுபக்க வாய்கால் நீளம் 2425 மீட்டா; மற்றும் அதன் ஆயக்கட்டு 559.76 ஏக்கர் ஆகும். ஆக மொத்தம் இத்திட்டத்தின் மொத்தம் பயனடையும் ஆயக்கட்டு சுமார் 2400 ஏக்கா;கள் ஆகும்.
ஏரியின் திட்டப்பணிகளின்படி தேக்கப்பட உள்ள 30.67 மில்லியன் கனஅடி நீருடன், ஏரியின் உட்பகுதியில் ஆழப்படுத்துவதன் மூலம் மேலும் 10 மில்லியன் கனஅடி நீரை சேமிக்கும் வகையிலான கருத்துரு மாநில திட்டக்குழுவிற்கு மாவட்ட நிர்வாகத்தினால் பரிந்துரை செய்யப்பட்டு அதற்கான ஒப்புதல் பெறப்பட்டு அதற்கான பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இதனால் இதனை சுற்றியுள்ள 6 கிராமங்கள் பயனடையும்.
பெரம்பலூர் மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தலமாக இந்த ஏரியை உருவாக்கும் வகையில் ஏரியின் கீழ் பகுதியில் 4 ஏக்கர் பரப்பளவில் ஒரு கோடி செலவில் பூங்காவும், ஏரியின் கரைப்பகுதியில் இருபது இலட்சம் செலவில் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை அமைக்கவும், அணைப்பகுதிக்கு பொதுமக்கள் வரும் வகையில் தொண்டமாந்துறை வழியாக மேலும் ஒரு சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.