இது குறித்து ஆட்சியர் தரேஸ் அஹமது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

பெரம்பலூர் மாவட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலத்தில் பிறந்தது முதல் 5 வயதுத்திற்குப்பட்ட இளம் சிறார் களுக்கு ஆரம்ப நிலையில் செவித்திறன் குறைபாட்டினை கண்டறிந்து மறுவாழ்வு அளிக்கும் ஆரம்பகால பரிசோதனை மையம் செயல்பட்டு வருகிறது.

செவித்திறன் குறையுடைய இளம் சிறார்களுக்கு உட்செவி ஒலி மூளைதண்டு நரம்பியல் வினை ஆற்றல் பரிசோதனை ஆகிய பரிசோதனைகள் இது நாள் வரையில் சென்னையில் உள்ள மருத்துவமனையில் செய்யப்பட்டு வந்தது.

தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் உள்ள ஆரம்பகால பரிசோதனை மையத்தில் ஆகிய பரிசோதனைகள் செவிதிறன் குறைவுடைய இளம் சிறார்கள் மற்றும் அனைத்து வயது நபர்களுக்கும் இலவசமாக செய்யப்பட்டு வருகிறது.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் ஓவ்வொரு வாரமும் திங்கள், புதன், சனி ஆகிய மூன்று நாட்களில் (திங்கள், புதன் அனைத்து பிரிவினருக்கும் சனிக்கிழமைகளில் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும்) காது, மூக்கு தொண்டை மருத்துவரால் பரிசோதனை செய்து 0 முதல் 6 வயது வரை உள்ள முழுவதும் காது கேட்கும் திறனற்ற இளம் சிறார்களுக்கு தமிழக முதல்வர் அவர்களின் விரிவான காப்பிட்டு திட்டம் மூலம் ரூ 12 லட்சம் மதிப்பில் உட்செவித் திறன் கருவி (காக்கிளியர் இம்பிளான்டேசன்) அறுவை சிகிச்சை மற்றும் காது கேட்கும் திறன் குறைவாக உள்ள நபர்களுக்கு ரூ 12 ஆயிரம் மதிப்பில் காதொலி கருவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியுடைய நபர்களுக்கு இலவச தேசிய அடையாள அட்டையும், மாதாந்திர உதவித் தொகையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் ரூ 30 லட்சம் மதிப்பில் செயல்பட்டு வரும் ஆரம்ப கால பரிசோதனை மையத்தினை செவித்திறன் குறைவுடைய இளம் சிறார்களின் பெற்றோர்கள் மற்றும் அனைத்து வயதினைச் சார்ந்த செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையலாம்.

இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய இணை இயக்குநர் மருத்துவ பணிகள் : 9444982674 அல்லது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்: 9042521640 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். என செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!