பெரம்பலூர் : பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஜுனியர் ரெட் கிராஸ் சங்க துணைக்குழு கூட்டம், மாவட்ட கல்வி அலுவலர் (பொ) ஜெயராமன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட கிளை கௌரவ செயலாளர் என். ஜெயராமன், பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பி. ரத்தினசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பீல்வாடி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அ. செல்வராஜ், இரூர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பி. ஜெயக்குமார், உதவி மற்றும் கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் பி. புகழேந்தி. பி. இளங்கோவன் ராமதாஸ். இ. உமையாள், மு. தேத்தரவு ஸ்டெல்லா, பி. ஜோதிலட்சுமி, ஆ. ஜோதிலட்சுமி, இணைக்கன்வீனர் ஆ. கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தொடர்ந்து, மாவட்ட கன்வீனர் வெ. ராதாகிருஷ்ணன் நிகழாண்டின் செயல் திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்.
கூட்டத்தில், ஜூலை 15 ஆம் தேதி முதல் பருவ உறுப்பினர்கள் கூட்டம் நடத்துவது, ஆகஸ்டு 2-வது வாரம் பள்ளிகளில் ஜெனிவா தினம் கொண்டாடுவது. ஆகஸ்டு 7, 8, 9 ஆகிய தேதிகளில் இளையோருக்கு பயிற்சி முகாம் நடத்துவது. டிச. 1 ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினம் அந்தந்தப் பள்ளிகளில் பேரணி நடத்துவது, 10 ஆம் தேதி உலக மனித உரிமைகள் தினம் கொண்டாடுவது. ஜன. 6-ல் சிறந்த இளையோருக்கு எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு நடத்துவது.
ஜன. 8, 9 ஆகிய தேதிகளில் இளையோருக்கான கிரேடு முறை தேர்வும், 27 ஆம் தேதி முப்பெரும் விழா நடத்துவது. ஒவ்வொரு பள்ளியிலும் அமைப்பை வலிமைப்படுத்த ஒவ்வொரு புதன்கிழமையும் அந்தந்த பகுதி இணைக்கன்வீனர்கள் மற்றும் மண்டல அலுவலர்களின் உதவியோடு பள்ளிகளை பார்வையிடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மண்டல அலுவலர் சு. ராஜமாணிக்கம், மாவட்டப் பொருளாளர் ஆ. கருணாகரன், மாவட்ட இணைக் கன்வீனர் சாதிக் பாட்சா, மண்டல பொறுப்பாளர்கள் தன்ராஜ், ஏ. ராஜா, மு. பெருமாள் உள்பட பலர் பங்கேற்றனர்.