ஜுலை 26ம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தொகுதி-II க்கான தேர்வு சிறப்பாக நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சியர் (பொ) மீனாட்சி தகவல்

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 26.07.2015 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 மணிமுதல் 1.00 மணி வரை நடைபெறவுள்ள தொகுதி- II க்கான எழுத்து தேர்விற்கு 18 மையங்கள் தெரிவுச் செய்யப்பட்டு, மொத்தம் 5114 நபர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

பெரம்பலூர் நகரில் உள்ள டோம்னிக் மேல்நிலைப்பள்ளியில் 114 நபர்களும், துறையூர் சாலையில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 300 மற்றும் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரிகளில் 2600 நபர்களும்,

வெங்கடேசபுரத்தில் அமைந்துள்ள பாரத மாநில வங்கி அருகிலுள்ள தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் 600 நபர்களும், எளம்பலூர் சாலையில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் 600 நபர்களும்,

குரும்பலூர் பாரதிதாசன் பல்கலை கழக உறுப்புக் கல்லூரியில் 300 நபர்களும், கீழக்கணவாய் அரசினர் தொழில்நுட்பக்கல்லூரியில் 600 நபர்களும் தேர்வு எழுத உள்ளனர்.

தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களுக்கும் சிறப்பு பேருந்து வசதி மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!