ஜெயலலிதா தனது கைப்பட எழுதிய உணவுப் பட்டியல் என கூறி, பட்டியல் ஒன்றை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் வெளியிட்டுள்ளது.
அந்த பட்டியலில் 2016 ஆகஸ்ட் 2 என தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் ஜெயலலிதாவின் உடல் எடை, 106.9 கிலோ என குறிப்பிடப்பட்டுள்ளது. காலை 5.05 மணி முதல் 5.35 மணி வரை, காலை உணவாக இட்லி, பிரெட், காபி ஆகியவை வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இளநீர், கிரீன் டீ, ஆப்பிள், பிஸ்கட், இளநீர் ஆகியவை காலை உணவாக எடுத்துக் கொண்டது போன்று குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. காலை 5.45 மணியளவில் கிரீன் டீ சாப்பிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. காலை 8 மணியளவில் ரிவைவ் எனப்படும் குளிர்பானம் சாப்பிட்டதாகவும், 8.55 மணியளவில் ஆப்பில் ஒன்றும், 9.40 மணியளவில் காபி குடித்ததாகவும் 5 பிஸ்கட்கள் சாப்பிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காலை 11.30 மணியளவில் பாஸ்மதி அரிசியில் சமைக்கப்பட்ட ஒரு கப் சாதம் சாப்பிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 2 மணி முதல் 2.35 மணி வரை மதிய உணவாக ஒன்றரை கப் பாஸ்மதி சாதம், 1 கப் யோகர்ட் எனப்படும் பானம், அரை கப் மஸ்க் மிலன் பலச்சாறு சாப்பிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 5.45 மணியளவில் 200 மில்லி காபி சாப்பிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாலை 6.30 மணி முதல் 7.15 மணி வரை அரை கப், வாதுமை கொட்டை மற்றும் உலர் பழங்கள், 1 கப் இட்லி உப்மா, தோசை ஒன்று, 2 துண்டு பிரெட், 200 மில்லி பால், ஆகியவை சாப்பிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உணவுடன் மிக்னர் எனப்படும் மருந்து 50 மில்லி , ஜானுவியா எனப்படும் மருந்து 100 மில்லி சாப்பிட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.