பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் நாரணமங்கலம் அருகே உள்ள விஜயகோபாலபுரத்தில் தனியார் டயர் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலையில் புதிதாக நிலக்கரியை எரித்து அதில் வரும் அனல் மூலம் மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அதனால் சுற்றுசசூழல் பெருமளவு பாதிக்கப்படும். ஆனால் சம்பந்தப்பட்ட தொழிற் நிறுவனம், அப்பகுதி மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி ரகசியமாக திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தெரியவருவதால் பொதுமக்களுக்கு முறையாக தெரியப்படுத்தாததால் கருத்துக் கேட்பு கூட்டத்தையும்,
நிலக்கரியில் இருந்து மின்சாரம் எடுக்கும் திட்டத்தையும் ரத்து செய்யக் கோரியும் பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் பெரம்பலூரை சேர்ந்த கார்த்திகேயன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் சார் ஆட்சியர் மதுசூதுன ரெட்டியிடம் மனு கொடுத்தனர்.