பெரம்பலூர்: வேப்பந்தட்டை அருகே உள்ள அனுக்கூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை கிடையாது. இதனால், அரசு ஆரம்ப சுகாதாரம் நிலையம் அருகே மினி டாஸ்மாக் கடையை இரண்டு பேர் நடத்தி வருவதாக பொதுமக்கள் மங்கலமேடு போலீசாருக்கு பல முறை புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து போலீசார் அலட்சியம் காட்டியதால், பொதுமக்களே இன்று ஒன்று திரண்டு அனுக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிiயைம் அருகே மது விற்பனையில் ஈடுபட்டிருந்த 2 பேரை நேற்று பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்கள் பக்கத்து கிராமமான தொண்டப்பாடியை சேர்ந்த ராமலிங்கம் (வயது35), பிரபு (வயது 25) என்பதும் தெரியவந்தது.
அப்போது அவர்களிடம் இருந்து 20 மேற்பட்ட மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், திண்பண்டங்கள் ஆகியவை கைப்பற்றினர். இவற்றின் மதிப்பு 2ஆயிரத்திற்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட பாட்டில்கள் புதுச்சேரி, காரைக்கால், கர்நாடக பகுதிகிளில் இருந்து தருவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிய வந்தது.
இது குறித்து மங்கலமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். காவல் துறையினரிடம் ஒப்படைப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்பான ராமலிங்கம் தப்பி ஓடிவிட்டான்.
காலதாமதமாக வந்த காவல் துறையினர் பிரபுவை மட்டும் கைது செய்து அழைத்து சென்றனர்.