பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பழனியாண்டி மகன் ராஜமாணிக்கம்,38, விவசாயி. இதே பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி பானுப்பிரியா,21, இவரது மகள் வரிஷா,2, ஆகிய மூவரும் ஒரு டூவிலரில் நக்கசேலத்திற்கு இன்று காலை சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது களரம்பட்டி அருகே எதிரே நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியிலிருந்து சிறுவாச்சூர் நோக்கி வந்த மினி வேன் டூவிலர் மீது மோதியது.
இதில் ராஜாமணிக்கம் உட்பட 3 பேரும் படுகாயமடைந்தனர். தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜமாணிக்கம் இறந்தார்.
இது குறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்கு பதிந்து வேன் டிரைவர் நாமக்கலை சேர்ந்த அப்துல்லா (33) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.