பெரம்பலூர்: (சு.ஆடுதுறை) 2ஆம் கட்ட நமக்கு நாமே பயணத்தின் போது சு. ஆடுதுறையில் வேலையில்லாத பட்டதாரிகளை மு.க ஸ்டாலின் சந்தித்தார். அப்போது எம்.ஏ. பி.எட்., படித்த பட்டதாரி கூறியதாவது: எம்.ஏ பி.எட் படித்த நாங்கள் டெட் எக்சாம் மூலம் கடும் பாதிப்பு அடைந்துள்ளோம்.
லட்சகணக்கில் பணம் கட்டி படித்த நாங்கள் தனியார் பள்ளிக்கு சென்றாலும், அங்கு மாதம் 3 ஆயிரம் மட்டுமே ஊதியம் வழங்குகிறார்கள் அதனை கொண்டு வாழ முடியவில்லை. வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என தெரிவித்தார். எனவே, டெட் எக்◌சாமை ரத்து எங்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டுமென கோரிக்ககை விடுத்தனர்.