பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமத்தில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை அரிவாள்மனையால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் அருகே உள்ள லாடபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் மனைவி மீனாட்சி(30). இவர் இன்று காலை 6 மணியளவில் தனது வீட்டு வாசலில் ஊராட்சி பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியில் வசிக்கும் ராமசாமி மகன் ரமேஷ்(26) என்பவர் முன்விரோதம் காரணமாக இங்கு வந்து ஏன் தண்ணீர் பிடிக்கிறாய் என மீனாட்சியை தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். இதனால் இருவக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் தன் வீட்டிலிருந்த அரிவாள்மனையை எடுத்து வந்து மீனாட்சியை வெட்டியுள்ளார். இந்த தாக்குதலில் இடது கை மற்றும் உடலின் பிற பகுதியில் வெட்டுப்பட்ட மீனாட்சி அக்கம் பக்கத்தினரால் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்தனர்.
இதுகுறித்து மீனாட்சி அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேசை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.