பெரம்பலூர்: தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி சேர்ந்த மாணவன் ஜி. ரஞ்சித் 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். அவர் பெற்ற மதிப்பெண்கள் விவரம்: தமிழ் 98, ஆங்கிலம் 100, கணக்கு 100, அறிவியல் 100, சமூக அறிவியல் என 500க்கு 498 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றதில் இவரும் உள்ளார்.
மாணவன் ரஞ்சித்தை தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தலைவர் அ.சீனிவாசன் பாராட்டினார். செயலாளர் நீல்ராஜ், பள்ளி முதல்வர் சாந்தி ஆகியோர் உடனிருந்தனர். ரஞ்சித்தன் பெற்றோர்கள் இனிப்பு ஊட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.