படவிளக்கம்: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விளையாட்டு தின விழா போட்டியில் வெற்றி பெற்ற ஒருவருக்கு தாளாளர் சீனிவாசன் பரிசு வழங்கினார்.
பெரம்பலூர்: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு தின விழா கல்லுõரி வளாக விளையாட்டு திடலில் நடந்தது.
விழாவுக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். செயலாளர் நீல்ராஜ், துணை தலைவர் கதிரவன், இயக்குனர்கள் பூபதி, மணி, நிர்வாக அலுவலர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பி.எஸ்.கே., கல்வி நிறுவனங்களின் தாளாளர் கருப்பையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். பள்ளியின் முதல்வர் மரியபுஷ்பதீபா வரவேற்றார்.
விழாவையொட்டி மாணவ, மாணவிகளின் உடற்றிறப்போட்டிகள் நடனம், பிரமிடு உட்பட பல்வேறு போட்டிகள் நடந்தது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு பி.எஸ்.கே., கல்வி நிறுவனங்களின் தாளாளர் கருப்பையா பரிசு வழங்கி பாராட்டினார்.
இதற்கான ஏற்பாடுகளை விளையாட்டு ஆசிரியர்கள் அறிவழகன், கீதாஞ்சலி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். முடிவில் ஆசிரியர் ராகவன் நன்றி கூறினார்.