20151027_pblr_gh
கடந்த ஓர் ஆண்டாக பெரம்பலூர் மாவட்டத்தில் பிரசவத்தினால் ஏற்படும் இறப்பு என்பதே இல்லை என சுகாதாரத்துறை இணை இயக்குநர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் சுகாதாரத் துறையின் மூலம் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், அரசு தலைமை மருத்துவமணையில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்துமான செய்திகள் பொதுமக்களுக்கு சென்று சேரும் வகையில் செய்தியாளர்க ள் உடனான சந்திப்பு இன்று பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் வே.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

1914 -ஆம் ஆண்டு பெரம்பலூரில் மகப்பேறு பிரிவு தொடங்கப்பட்டு 1939 -ல் வெள்ளிவிழா கட்டிடம் அடிக்கல் நாட்டப்பட்டு ஜுலைமாதம் செயல்பட தொடங்கியது. 100 ஆண்டுகள் முடியும் தருணத்தில் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 24 மணிநேர மகப்பேறு (CEmONC) 154 படுக்கைகள் கொண்ட பராமரிப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

இந்தப்பிரிவில் அறுவை சிகிச்சை அரங்கம் அமைப்பதற்காக 47 லட்சம் மதிப்புள்ள உபகரணங்கள் புதியதாக அமைக்க இரண்டு மயக்கவியல் கருவிகள், மூன்று அறுவை அரங்க மேஜைகள் முழுவதும் தானியங்கு மேஜைகள் இரண்டு நவீன நிழல்விழாத விளக்குகள் அமைக்கப்பட்டள்ளன. கர்ப்பிணி பெண்கள், தாய் மற்றும் சேய் தங்குவதற்காக சுமார் 18 லட்சம் மதிப்பிற்கு 200 புதிய கட்டில் மெத்தைகள் வாங்கப்பட்டுள்ளன.

புதியதாக நவீனபடுத்தப்பட்ட இரத்தவங்கி செயல்பட தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இரத்தம் ஐந்து பகுதிகளாக பிரித்தெடுக்கப்பட்டு தேவையான அளவு அலகுகள் C – arm நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் அளவிற்கு மருத்துவக்கல்லூரிக்கு இணையான இரத்தவங்கி செயல்படுகிறது. 24 மணிநேர மகப்பேறு மற்றும் தீவிர பச்சிளங்குழந்தை பிரிவு இரத்தவங்கி முழுவதுமாக செயல்படுவதால் தாய்சேய் நலப்பிரிவு 24 மணி நேரமும் தங்கு தடையின்றி செயல்படுவதுடன் மற்றும் (high risk mother) உயர்ஆபத்து தாய்மார்கள் சிகிச்சை பகுதி 30 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புதியதாக 11 லட்சம் மதிப்புள்ள ஊ – யசஅ கருவி எலும்புமூட்டு அறுவை சிகிச்சைக்காக அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அதிகமாக மூட்டு மாற்று அறுவைசிகிச்சைகள் செய்யப்படலாம். புதியதாக நமது பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பல்சிகிச்சை பிரிவில் அறுவை சிகிச்சைகள் மாண்குமிகு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

பெரம்பலுhர; மாவட்டத்தில் 2008-2009 ஆம் ஆண்டில் 18 தாய்மார;களும், 2009-2010 ஆம் ஆண்டில் 10 தாய்மார்களும், 2010-2011 ஆம் ஆண்டில் 7 தாய்மார்களும், 2011-2012 ஆம் ஆண்டில் 12 தாய்மார்களும், 2013-2014 ஆம் ஆண்டில் 6 தாய்மார்களும் பேறு காலத்தில் பிரசவத்தின்போது பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனர். மாவட்ட ஆட்சியரின் தொடர் அறிவுறுத்தலின்பேரின் எடுக்கப்பட்ட பல்வேறு தொடர் நடவடிக்கைகளால் 2014-2015 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு பேறுகால இறப்பு என்பதே இல்லை என்ற நிலை பெரம்பலூர் மாவட்டத்தில் உருவாகியுள்ளது.

கர்ப்பிணித்தாய்மார்களை கிராம சுகாதார செவிலியர்கள் முறையாக கண்காணித்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி தங்கள் பகுதிக்குட்பட்ட கர்பிணித்தாய்மார்களின் உடல் நலம் குறித்த நிற அட்டவணையை தயார் செய்து கொடுப்பார்கள், அந்த அட்டவணையின்படி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடக்கும் ஆய்வுக்கூட்டத்தில் சத்துக்குறைபாடுடைய அல்லது இரத்தசோகையால் பாதிக்கப்பட்ட அல்லது வேறு எதும் நோய்களால் பாதிக்கப்பட்டு பிரசவத்திற்கு தேவையான உடல்தகுதி இல்லாத தாய்மார்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். அதையும் தாண்டி உடல் நிலை தேறாத கர்ப்பிணித்தாய்மார்கள் உடனடியாக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமணைக்கு அழைத்துவரப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்பட்டதும், பேறுகால மரணங்களை தவிர்ப்பதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு தொடர்ந்து உடற்பரிசோதனை செய்யப்படுகிறது. இதுபோன்ற தொடர் நடவடிக்கைகளால்தான் பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டாக மகப்பேறுகால இறப்பு என்பதே இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது.

இதற்காக உழைத்த பொது சுகாதாரத்துறை, மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை மருத்துவர்கள் மற்றும் அதைச்சார்ந்த அனைத்து அலுவலர்கள் மற்றும் கிராமசுகாதார செவிலியர்கள் அனைவருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம், என சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் வே.உதயகுமார் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து அரசு தலைமை மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கருவிகளை செய்தியாளர்களை நேரில் அழைத்துச் சென்று காண்பித்து இணை இயக்குநர் விளக்கினார்.

மேலும், பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவ தமிழக அரசின் முயற்சியாலும், மாவட்ட நிர்வாகத்தினாலும் அனைத்து அம்சங்களும் நிறைந்த மருத்துவமனையாக தர மாற்றம் பெற்று வருகிறது. இன்னும் சில வசதிகள் குறைவு மற்றும் ஆட்கள் பற்றாக்குறையும் விரைவில் களையப்பட்டு பொதுமக்களுக்கு அதிநவீன தனியார் மருத்துவ மனைக்கு இணையான சிறந்த சேவை அளிப்போம் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது சுகாதாரத்துறை துணை இயக்குநர் மருத்துவர் கே.சி.சேரன், அரசு தலைமை மருத்துவமணை இருக்கை மருத்துவர் திருமால், கண்காணிப்பாளர் சசிகலா, மருத்துவர்கள் அரவிந்தன், தினேஷ், உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பாவேந்தன் உள்பட பலர் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!