சிதம்பரம் மக்களவை உறுப்பினர் எம்.சந்திரகாசி பாராளுமன்றத்தில் பேசியதாவது (அப்படியே):
மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே!
சமீபத்தில் பெய்த தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் தமிழ்நாடு பெருமளவிலான சேதத்தை சந்தித்துள்ளது. இந்த சிரமமான சூழ்நிலையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களின் போர்க்கால நடவடிக்கையால் உடனுக்குடனான மீட்பு பணிகள், நிவாரணப்பணிகள் பாதிக்கப்ட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2004ல் தமிழ்நாட்டை தாக்கிய சுனாமியில் எடுக்கப்பட்ட போர்க்கால நடவடிக்கை போலவே தற்போதும் மாண்புமிகு அம்மா அவர்கள் துரித நடவடிக்கை எடுத்து தமிழக மக்களை காப்பாற்றியுள்ளார்கள்.
தமிழக அரசின் சார்பில் 7,150 நிவராப்பணிகளுக்கான முகாம்கள் துவங்கப்பட்டு 1.35 கோடிக்கும் அதிகமான உணவுப்பொட்டலங்கள் 19 லட்சம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்ட்ட மக்களுக்கு வழங்வ வேண்டுமென்பதற்காக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கூடுதலாக 30,000 மெட்ரிக் டன் அரிசி வழங்கிட வேண்டுமென்று மத்திய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதைப்போலவே தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் கேஸ் சிலிண்டர்களையும் இழந்துள்ளனர். சுமார் 38.20 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கேஸ் சிலிண்டர்களை இழந்துள்ளனர். எனவே, கூடுதலாக 19,199 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் கேஸ் சிலிண்டர்களை பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே, சம்மந்தப்பட்ட துறையின் அமைச்சர்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அரிசி, மண்ணெண்ணெய் மற்றும் கேஸ் சிலிண்டர்களை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். என இவ்வாறு ஜுரோ ஹவர்சில் பேசினார்.