பெரம்பலூர்: ஒவ்வொரு ஆண்டும், சமூக நீதிக்காக பாடுபவா;களை சிறப்பு செய்வதற்காக “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதினை பெறுவோருக்கு ரூபாய்.ஒரு லட்சம் பொற்கிழியும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது.
2015 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின், சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். எனவே இவ்விருதிற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் சமூக, பொருளாதாரம் மற்றும் கல்வி மேம்பாடு அடைய மேற்கொண்ட முயற்சிகள், அம்மக்களின் வாழ்க்கைத்தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள், கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றுடன் அவர்களது பெயர், சுயவிவரம் மற்றும் முழு முகவரியுடன் 9.11.2015க்குள் மாவட்ட பிற்ப்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், மேலும் தகவல்களுக்கு 04328-224475 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
எனவே தகுதியுடைய நபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.